Atlee: சொன்னதை செய்து காட்டுவாரா அட்லீ… அல்லு அர்ஜுனுடன் இணையும் ஷாருக்கான்… அடடே இதுதான் அதுவா..?

ஜவானை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க அட்லீ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானும் இணையவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mar 13, 2024 - 12:14
0 202
Atlee: சொன்னதை செய்து காட்டுவாரா அட்லீ… அல்லு அர்ஜுனுடன் இணையும் ஷாருக்கான்… அடடே இதுதான் அதுவா..?

அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் மரண மாஸ் ஹிட் அடித்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியானது ஜவான். இந்தப் படம் மூலம் முதன்முறையாக இந்தியில் அறிமுகமான அட்லீ, பாலிவுட் ஹீரோக்களை அதிர வைத்தார். ஏனென்றால் ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸை கலங்கடித்தது. இதனால் பாலிவுட் ஹீரோக்கள் அட்லீக்காக காத்திருக்கின்றனர்.  

இந்நிலையில் விஜய்யின் கடைசி படத்தை இயக்க வேண்டும் என அட்லீ ஆர்வம் காட்டி வந்தார். விஜய் தேர்தலில் களமிறங்கிவிட்டதால் கடைசிப் படத்தை 6 மாதங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என பிளான் செய்துள்ளார். ஆனால் அட்லீ அந்த வேகத்தில் ஷூட் செய்ய மாட்டார் என விஜய் அவரை நம்ப மறுக்கிறாராம். இதனால் மீண்டும் பலிவுட் பக்கம் செல்ல முயற்சித்து வருகிறார் அட்லீ. சல்மான் கான் படத்தை இயக்கலாம் என பிளான் செய்த அட்லீக்கு, ஏஆர் முருகதாஸ் ட்விஸ்ட் கொடுத்துவிட்டார்.  

இதனால் தற்போது டோலிவுட் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுனுடன் இணையவுள்ளாராம் அட்லீ. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி அபிசியல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்படி, அட்லீ – அல்லு அர்ஜுன் இணையும் படத்தில் ஷாருக்கானும் கேமியோ ரோலில் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜய் – ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க ஸ்க்ரிப்ட் எழுதி வந்தார் அட்லீ. அதே கதையில் தான் அல்லு அர்ஜுனையும் ஷாருக்கானையும் நடிக்க வைக்கலாம் என அட்லீ முடிவு செய்துவிட்டாரோ என்னவோ. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User