ரத்தன் டாடா உடலுக்கு தலைவர்கள், தொழிலதிபர்கள் நேரில் மரியாதை

ரத்தன் டாடா உடலுக்கு நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களும் குவிந்து வருகின்றனர்.

Oct 10, 2024 - 12:21
0 255
ரத்தன் டாடா உடலுக்கு தலைவர்கள், தொழிலதிபர்கள் நேரில் மரியாதை

ரத்தன் டாடா உடலுக்கு நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களும் குவிந்து வருகின்றனர்.

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, 1937ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் டாடா குழும தலைவராக 1991 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் 50 மடங்கு லாபத்தை பெருக்கியது. டாடா குழுமம் ரூ. 1 லட்சம் காரை அறிமுகம் செய்து நடுத்தர மக்களின் கனவை நனவாக்கியவர் ரத்தன் டாடா.

 டாடா குழுமத்தின் முக்கிய சமயங்களில் போது தலைமை வகித்தது, டாடாவின் அடுத்த பாய்ச்சலுக்கு காரணமாக இருந்தது முதல் தற்போது இளம் தொழில் முனைவோரின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவது என ரத்தன் டாடாவின் தொழில்துறை பயணம் சிறப்பு வாய்ந்தது.

ஒரு தொழிலதிபராக இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் ரத்தன் டாடா என்று சொன்னால் மிகையாகாது. மேலும், பிசினஸ்ஸில் லாபம் பார்த்தது மட்டுமல்லாமல், இந்த பணத்தை பிறருக்கு உதவ பயன்படுதியவர் தான் டாடா. டாடா அறக்கட்டளை மருத்துவம், கல்வி, கலை உள்ளிட்ட விஷயங்களில் தொண்டு பணிகளை செய்து வருகிறது.

இந்நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவில் காலமானார்.

அவரது உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. இந்நிலையில் அவரது உடல் மும்பை தேசிய மையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மாலை 4 மணி வரை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார்,  NCP தலைவர் சரத்பவார், சுப்ரியா சூலே எம்.பி,  உள்ளிட்டோர் நேரில் மரியாதை செலுத்தினர். ஆதித்யா பிர்லா குழும சேர்மன் குமார் மங்கலம் உள்ளிட்ட தொழிலதிபர்களும் புகழஞ்சலி செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User