‘அந்த பொண்ண பத்தி பேசுனா செருப்பால அடிக்கனும்…” – மனம் திறந்த வெங்கடேஷ் பட்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை – பிரியங்கா சர்ச்சை குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் வெங்கடேஷ் பட். 

Sep 21, 2024 - 16:38
0 994
‘அந்த பொண்ண பத்தி பேசுனா செருப்பால அடிக்கனும்…” – மனம் திறந்த வெங்கடேஷ் பட்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் இனி அங்கமாக இருக்கப்போவதில்லை என்றும். தனக்கு தன்மானம், சுயமரியாதை தான் முக்கியம் எனவும் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவரான மணிமேகலை வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு, அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தொகுப்பாளர் ஒருவரின் தலையீட்டால் தான் இப்படியான முடிவை எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். 

மணிமேகலை இப்படி வீடியோ வெளியிட்டதும், அப்போட்டியில் பங்கேற்ற பிரபல தொகுப்பாளினி பிரியங்காவை பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடி வந்தனர். பிரியங்கா ஒரு நார்சிஸ்ட் என்று பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், மணிமேகலைக்கு ஆதரவாக களமிறங்கி பிரியங்காவை தனிப்பட்ட முறையில் தாக்க ஆரம்பித்தனர் நெட்டிசன்கள். 

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக இது தொடர்ந்துகொண்டே இருந்தது. இதனால் குக் வித் கோமாளி பிரபலங்கள் ஒவ்வொருவரும் செட்டில் என்ன நடந்தது என்று தெரியாமல் பிரியங்காவை குறை சொல்லாதீர்கள் என்று அடுத்தடுத்து களமிறங்கினர். போட்டியாளரான பூஜா, கோமாளிகளான குரேஷி, சுனிதா உட்பட பலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டதோடு, மணிமேகலைக்கு அட்வைஸ்களையும் வழங்கினர்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களில் நடுவராக இருந்து பிறகு விலகிய வெங்கடேஷ் பட் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

தனியார் யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் நடந்தது ஒரு அக்கா, தங்கச்சி சண்டை. இத பத்தி பேச யாருக்குமே உரிமை இல்ல. மணிமேலையும் பிரியங்காவும் பேசி தீர்த்துக் கொள்வார்கள். நடுவில் இருப்பவர்கள் கிளம்பி தங்களுடைய எண்ணங்களை சொல்கிறார்கள். முதலில் ஒரு பெண்ணை குறித்து தவறாக பேச அவர்கள் யார்? அப்படி பேசும் எவனா இருந்தாலும் அவனை செருப்பால அடிக்கணும். அந்த பொண்ணு ஒரு வீடியோ போட்ருக்கு, அந்த வீடியோல என்ன சொல்லிருக்கு அத பத்தி பேசு… அந்த வீடியோ பத்தி பேசு… அதவிட்டு அவங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச யாருக்கும் உரிமையே கிடையாது. எனவே, இந்த சர்ச்சை தன்னாலே அடங்கி போயிடும்” என்று வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 2
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User