பிரபல இயக்குநர் மீது  ‘வெடி’ பட  நடிகை பரபரப்பு புகார்

தெலுங்கு இயக்குநர் ஒரு நடிகையை கர்ப்பமாக்கி அந்த பெண்ணின் சினிமா வாழ்க்கையையே நாசம் செய்தார்.

Oct 10, 2024 - 15:47
0 298
பிரபல இயக்குநர் மீது  ‘வெடி’ பட  நடிகை பரபரப்பு புகார்
பிரபல இயக்குநர் மீது  ‘வெடி’ பட  நடிகை பரபரப்பு புகார்

விஷாலின் வெடி பட நடிகை பூனம் கவுர் பிரபல தெலுங்கு இயக்குநர் மீது குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தி உள்ளது. இந்த கமிட்டியில் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை பகிரிந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பல நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி, என் வழி தனிவழி, நாயகி உள்ளிட்ட படங்களில் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள நடிகை பூனம் கவுர் பிரபல இயக்குநருக்கு எதிராக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து பூனம் கவுர் வெளியிட்டுள்ள பதிவில், “ தெலுங்கு இயக்குநர் ஒரு நடிகையை கர்ப்பமாக்கி அந்த பெண்ணின் சினிமா வாழ்க்கையையே நாசம் செய்தார். மேலும் சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் அந்த இயக்குநர் செய்த கொடூரமான செயலுக்கு தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட பஞ்சாபி நடிகைக்கு கொஞ்சம் உதவி செய்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குநரின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் யார் அந்த பிரபல இயக்குநர் என்பதும், நடிகை யார் என்பதும் தெரியவில்லை. சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் மற்றும் இயக்குநர் திரி விக்ரம் ஆகியோர் மீதும் நடிகை பூனம் கவுர் குற்றச்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.நடிகை பூனம் கவுரின் குற்றச்சாட்டு வீடியோ தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User