தவெக முதல் மாநாடு: நாளை பூமி பூஜை- ஸ்பாட் விசிட் அடித்த புஸ்ஸி ஆனந்த் 

நாளை காலை 4 முதல் 6 மணிக்குள் பந்தல் கால் பூமி பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

Oct 03, 2024 - 21:05
0 254
தவெக முதல் மாநாடு: நாளை பூமி பூஜை- ஸ்பாட் விசிட் அடித்த புஸ்ஸி ஆனந்த் 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ள இடத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதைத்தொடர்ந்து தவெகவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. சமீபத்தில் தவெக மாநில கட்சியாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து தவெகவினர் அரசியல் பணிகளை தொடங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து செப்டம்பரில் தவெகவின் முதல் மாநாடு நடைபெறும் என கூறப்பட்டது.

ஆனால் மாநாடு நடக்கும் இடம் தேர்வு, காவல்துறை அனுமதி என பல்வேறு பிரச்னை காரணமாக தவெக முதல் மாநாடு அக்.27ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தார். மேலும் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் வி.சாலை என்ற இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டுக்கு 17 நிபந்தனைகள் விதித்து காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் மாநாட்டிற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்த பட்சம் 10 ஆயிரம் பேரையாவது அழைத்து வர வேண்டும் என மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு வரும் வாகனங்கள் மற்றும் பதிவெண் விவரங்களை கட்சி தலைமை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தவெக முதல் மாநாட்டுக்கு பந்தல் கால் நடும் விழா நாளை நடைபெற உள்ளது. இதன்படி நாளை காலை 4 முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் காணொலி மூலம் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெற உள்ள இடத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி தொண்டர்களுடன் இன்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் மாநாட்டு பூமி பூஜைக்கான ஆயத்த பணிகளை தொடங்கினர். நாளை நடைபெற உள்ள மாநாட்டு திடல் பூமி பூஜை நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் கொண்டுவரப்பட்டு பூஜைகள் செய்யப்பட உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User