தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பா? டிடிவி தினகரன் பதில்!

தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி உருவானாலும் ஆச்சரியமில்லை என்றும், முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்தும் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Jul 11, 2026 - 07:26
0 302
தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பா? டிடிவி தினகரன் பதில்!

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த முடிவு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக அதிமுக ஆட்சியை தோற்கடித்து தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்நிலையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக ,அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விஜயை ஆட்சியமைப்பதை தடுப்பதற்காகவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று புகார் எழுந்தது. இதனடையில் திமுக ,அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் எழுந்தது?

இதற்கு டிடிவி தினகரன் திமுக அதிமுக கூட்டணி உருவாவதில் எந்த தவறும் இல்லை என்றும் அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் இணைக்கும் என்றும் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் அரசியல் சூழல் யாரையும் இணைக்கும். பேரறிஞர் அண்ணாவும் ராஜாஜியும் ஒன்றிணைந்துள்ளனர். கடந்த காலங்களில் பல  உதராணங்கள் உள்ளன. திமுக கூட்டணியில் இருந்தவர்களை இழுத்து அமைச்சரவையில் இணைப்பது சரி என்றால் இந்த கூட்டணியும் சரி தான்.

திமுக அதிமுக கூட்டணி உருவானாலும் ஆச்சர்யமில்லை.சூழ்நிலை தான் அதை முடிவு செய்யும். விஜய் சினிமா கவர்ச்சி மூலமாக தான் இந்த தேர்தலில் 35 சதவீதமும், எங்கள் கூட்டணி 23 சதவீதமும், திமுக கூட்டணி அதைவிட கூடுதல் வாக்கு வாங்கியது.தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றால்  அந்த வெற்றியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள்  வியூகத்தை அமைக்கும். விஜய் என்ன 50, 60 ஆண்டு கால சேவை செய்தவாரா? சினிமா கவர்ச்சியில் மட்டுமே ஆட்சிக்கு வந்துவிட்டு முதலமைச்சராக பதவியேற்றுயுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.

மேலும் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை என்பது கடையில் உள்ள தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதை தான் விஜயின் இந்த கருணை அரசு பணி நியமன ஆணை என்பது. காங்கிரஸ்,ஐயூஎம்எல் ,மீது விஜய்க்கு நம்பிக்கை இல்லை என நினைக்கிறேன்.குதிரை பேரம் என்றால் கோப்படுகிறார்.எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தம் கட்சிக்குள் இழுத்துக்கொண்டுள்ளார். ஆனால் முதலமைச்சர் விஜய் ஊழல் பற்றி களவாணி பற்றியெல்லாம் பேசுகிறார். அப்படியென்றால் எம்எல்ஏ களவாணி யார்? விஜய் இன்னும் சினிமர் நடிகராகவே இருக்கிறார்.அதை சொன்னால் கோபப்படுகிறார்.

சினிமா கிளைமேக்ஸில் பேசுவது போல் பட டயலாக்கா பேசிக்கொண்டு இருக்கின்றார். முதலமைச்சர் போல் பேச  வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு பேசியதை போலவே விஜய்யின் பேச்சு உள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்கு யார் காரணமாக இருந்தாலும் தண்டணை வழங்க வேண்டும். தங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ? என்ற பயம் தற்போது உள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வந்துவிட்டது போல… என்று விஜயை விமர்சித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமமுகவின் அடுத்த நகர்வு குறித்து ஆலோசனையில் உள்ளோம், அமமுகவும் ஜெயலலிதாவின் கட்சி தான்" என்று கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User