ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் விவகாரம்... NCB-யிடம் ஆவணங்களைக் கேட்கும் NIA...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் தொடர்பான ஆவணங்களை என்.சி.பி-யிடம், என்.ஐ.ஏ கேட்டுள்ளது.

Mar 13, 2024 - 20:41
0 261
ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் விவகாரம்... NCB-யிடம் ஆவணங்களைக் கேட்கும் NIA...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் தொடர்பான ஆவணங்களை என்.சி.பி-யிடம், என்.ஐ.ஏ கேட்டுள்ளது.

ரூ.2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் உட்பட 5 பேரை கைது செய்தனர். ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருட்களை கடத்தியிருப்பதும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு போதை பொருள் சப்ளை செய்திருப்பதும் தெரியவந்தது. 

போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகள், தொடர்புடையவர்களின் விவரங்களை பெற்று நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக என்.சி.பி. கூறியது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் போதை பொருள் சப்ளை செய்த விவரங்களை சேகரித்து கைது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக என்.சி.பி. அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

அதன்படி, ஜாபர் சாதிக் அளித்த தகவலின் பேரில் அவரின் முக்கியக் கூட்டாளியான சதா என்பவரை என்.சி.பி. அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்தனர். 

இந்த நிலையில் ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான ஆவணங்களை டெல்லி என்.ஐ.ஏ அதிகாரிகள், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

இதனிடையே, வெளிநாடுகளுக்கு சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User