டெலிகிராம் செயலி குற்றவாளிகள் தீவிரவாதிகளின் கூடாரம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் 

டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படுவதாக,டில்லி நீதிமன்றத்தில் மத்திய அரசு திடுக்கிடும் வாதத்தை முன் வைத்துள்ளது.

Jun 18, 2026 - 12:31
0 227
டெலிகிராம் செயலி குற்றவாளிகள் தீவிரவாதிகளின் கூடாரம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் 
டெலிகிராம் செயலி குற்றவாளிகள் தீவிரவாதிகளின் கூடாரம்

நீட் மறுதோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நோக்கில் ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், ஏற்கெனவே டெலிகிராமில் பகிரப்பட்ட தகவலை சரிசெய்யும் வசதியை (எடிட்டிங் வசதி) 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கவும் டெலிகிராம் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து, டில்லி உயா்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசின் உத்தரவால் சுமாா் 15 கோடி டெலிகிராம் பயனாளா்கள் பாதிக்கப்படுவா் எனத் தெரிவித்திருந்தது. அந்த மனு, உயா் நீதிமன்றத்தில் இன்றும் விசாரணைக்கு வந்தது.டில்லி உயர் நீதிமன்றத்தில் டெலிகிராம் தடைக்கு எதிரான வழக்கில், மத்திய அரசு பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.  பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், சிறார் துஷ்பிரயோகம், நிதி மோசடிகளுக்கு டெலிகிராம் பயன்படுகிறது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய  அரசு பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்தது. 

செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களால், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைப் எளிதில் கண்டறிய முடிவதில்லை. இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்தியாவில் தற்காலிக தடைக்கு எதிராக டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User