திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரம் - சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து

Sep 30, 2024 - 15:06
0 234
திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரம் - சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரம் - சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

திருப்பதி லட்டில் கலப்படம் குறித்து ஆய்வறிக்கை தெளிவாக இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி இருந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் உணர்வுகளை ஜெகன் மோகன் தலைமையிலான அரசு புண்படுத்திவிட்டதாக ஊடகங்களுக்கு சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். இது குறித்து முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை ஆதாரமாக திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக  குறித்து ஆய்வறிக்கை ஒன்றை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் வெளியிட்டார். மேலும், திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பைக் கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுத்தார். மேலும் திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் திருப்பதி லட்டு கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் ஆய்வறிக்கையை டிசம்பர் மாதம்  வெளியிட்டதன் காரணம் என்ன? மேலும், பக்தர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் இதுபோன்ற ஒரு அறிக்கை மாநில அரசால் வெளியிடப்பட்டிருக்க வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பியது.

மேலும், முதலமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் எடுத்துச் சென்றது ஏன்? நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப்பயன்படுத்தப்பட்டது என இதில் குறிப்பிடப்படவில்லை. சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்துள்ள மாநில அரசு, அதன் அறிக்கை வருவதற்குள் ஊடகங்களில் இந்த ஆய்வறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? மேலும் அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கி வைக்க வேண்டும் என பல்வேறு கேள்விகளை சந்திரபாபு நாயுடு தரப்பிற்கு உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User