Vettaiyan: இந்தியன் 2 தோல்வி... வேட்டையனுக்கு வந்த சிக்கல்... இயக்குநருக்கு ஆர்டர் போட்ட ரஜினி..?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியன் 2 தோல்வியால் வேட்டையன் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jul 18, 2024 - 15:48
0 1.2
Vettaiyan: இந்தியன் 2 தோல்வி... வேட்டையனுக்கு வந்த சிக்கல்... இயக்குநருக்கு ஆர்டர் போட்ட ரஜினி..?
Vettaiyan Release Date

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. கூலி படத்தில் ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் நடிப்பது மட்டுமே இதுவரை கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இவர்கள் தவிர கூலி படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து இதுவரை அப்டேட் எதுவும் வரவில்லை. இதனிடையே ரஜினியின் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். 

லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினி ரிட்டையர்ட் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மரண தண்டனைகளுக்கு எதிராக போராடும் கேரக்டரில் நடித்துள்ளாராம். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் வேட்டையனில் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் லைகா தயாரிப்பில் வெளியான இந்தியன் 2ம் பாகம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை.

இன்னொரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இந்தியன் 2 பெரிய ஏமாற்றம் கொடுத்துள்ளதால், வேட்டையன் ரிலீஸுக்கு இது சிக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாமே வேட்டையன் இயக்குநர் தசெ ஞானவேலுக்கு பிரஸராக அமைந்துள்ளதாம். அதாவது ஏற்கனவே பல சிக்கல்களில் இருக்கும் லைகா நிறுவனத்துக்கு, தசெ ஞானவேலும் சரியாக கம்பெனி கொடுக்கவில்லையாம்.

ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி வருவதால் வேட்டையனில் நடிக்கும் நடிகர்களுக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் முதலில் தனது போர்ஷனை முழுமையாக முடிக்க வேண்டும் என ஞானவேலுக்கு ஆர்டர் போட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதனால் முதலில் ரஜினியை மட்டும் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்து அனுப்பிவிட்டாராம். ஆனால், மற்ற நடிகர்களின் சில காட்சிகளும், பேட்ச் ஒர்க்களும் இன்னும் முடியாமல் இழுத்துக்கொண்டே செல்கிறதாம்.

இதனால் லைகா தரப்பில் இருந்தும் இயக்குநர் தசெ ஞானவேலுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஷூட்டிங் தாமதமாகிக் கொண்டே போனால், சொன்னபடி அக்டோபர் மாதம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே சூர்யாவின் கங்குவா படமும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுபற்றி பேசியிருந்த ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ரஜினியின் வேட்டையன் அக்டோபர் மாதம் வெளியாகாது எனவும், ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User