சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ... விஷ்ணுவின் விருப்பத்தை நிறைவேற்றிய நடுவர்கள்..! 

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சிறுவன் விஷ்ணு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது மழலைக்குரலைக் கேட்டு மயங்கிய நடுவர்கள் அவனின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளனர். 

Dec 06, 2024 - 13:10
Updated: 2 years ago
0 465
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ... விஷ்ணுவின் விருப்பத்தை நிறைவேற்றிய நடுவர்கள்..! 
விஷ்ணு

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் ஒரு சிறுகுரல் ஒலித்தது. அந்த அழகிய குரல் அது விஷ்ணுவின் அழகிய மழலைக்குரல்.   அவர் நிகழ்ச்சியின் முதல் நாளில் பாடிய “அத்தை மக உண்ண நினைச்சு அழகு கவித எழுதி வெச்சேன்” என்ற பாடல் அவரது குரலில் அவ்வளவு இனிமையாக இருந்தது. அவர் பாடல் பாடிய பிறகு, ஒளிபரப்பப்பட்ட வீடியோவில், அந்த மழலையின் குரலுக்கு பின்னல் ஒரு கிராமத்தின் அழுகுரலும் கேட்டது. 

விஷ்ணு குருகுளாம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து தற்போது, விஜய் டிவியில் போட்டியாளர்களில் ஒருவராக பாடிக்கொண்டிருக்கிறார்.

பன்னிரண்டு வயது, சின்னச்சிரிய உருவம், மழலைக்குரலில் பாடும் அழகு நம்மை மெய்யுருகச்செய்கிறது.  அம்மா அப்பா இருவரும் கூலி வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தினக்கூலி வெறும் இருநூறு ரூபாய் என்று கூறியது பார்போரை மனதை உருகச்செய்தது, நீ பாடிய பாடலை பார்த்தாய என்று தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்த கேட்ட போது, விஷ்ணு தான் பாடிய பாடலை அவனால் பார்க்க இயலவில்லை என்று கூறினான்.  ஏனென்று  கேட்ட போது, 'எங்க வீட்ல டிவி எல்லாம் கிடையாது அண்ணா' என்றான். உடனே அவர், தான் டிவி ஒன்றை பரிசளிக்கபோவதாக கூறினார். மேலும் அந்த வீடியோவில் தனக்கு கீபோர்டு வாசிக்க வேண்டும் என்று கூறியிருந்தான் விஷ்னு. 

விஷ்ணுவின் பாடும் திறனை பாராட்டி இசையமைப்பாளர் மற்றும் நிகழ்ச்சியின் நடுவர்களின் ஒருவரான டி. இமான் அவனுக்கு கீபோர்டு பரிசாக அளித்தார். விஷ்ணுவின் பள்ளி படிப்புக்கு தேவையான உதவிகளை பாடகர் மனோவும் சித்ராவும் அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எல்லோரும் போட்டி போட்டு விஷ்னுவிற்கா பரிசுகளை வழங்கிய நிலையில், தன் பங்கிற்கு தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் வீட்டில் விறகு அடுப்பில் சமைப்பதாக கூறினார்கள், தான் அவர்களுக்கு காஸ் அடுப்பையும் பரிசாக கொடுப்பதாக பிரியங்கா அறிவித்தார். 

விஷ்ணு தனக்காக மட்டும் இந்த போட்டியில் பங்குபெறவில்லை தன்னுடைய கிராமத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற ஆசையில் மேடை எறியுள்ளார்.   அந்த ஊர் மக்களிடம் சூப்பர் சிங்கர் குழு என்னதான் அங்கு தேவை என்று விசாரிக்கப்போனது.  அந்த ஊரில் தண்ணீர் கிடையாது.  கிடைக்கும் தண்ணீர் உப்பு நீர்.  அதை குடித்ததால் பலருக்கு பலவிதமான உடல் நோய்கள் வந்தது.  குடி தண்ணீருக்கு பல கிலோ மீட்டர் நடந்து சென்று எடுத்துவரவேண்டும் என்று தங்களது கஷ்டங்களை தெரிவித்து உள்ளனர். 

அந்த வீடியோ வெளியான பிறகு பலரும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த ஊர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பல நல்ல உள்ளங்கள் தற்போது முன்வந்துள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விஷ்ணுவின் குரல் அந்த ஏழை ஊர் மக்களின் துயரினை விரைவில் போக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User