சினிமா டப்பிங் யூனியன் தேர்தலில் வென்று மீண்டும் தலைவரானார் நடிகர் ராதாரவி...

சினிமா டப்பிங் யூனியன் தேர்தலில் 662 வாக்குகளுடன் வெற்றி பெற்ற நடிகர் ராதாரவி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Mar 17, 2024 - 22:00
0 703
சினிமா டப்பிங் யூனியன் தேர்தலில் வென்று மீண்டும் தலைவரானார் நடிகர் ராதாரவி...

சினிமா டப்பிங் யூனியன் தேர்தலில் 662 வாக்குகளுடன் வெற்றி பெற்ற நடிகர் ராதாரவி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு 2024-2026 ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி தற்போது இருந்து வரும் நிலையில், மீண்டும் தலைவர் பதவிக்காக அவர் போட்டியிட்டார். அதே தலைவர் பதவிக்கு ராஜேந்திரன், சர்குணராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(மார்ச்-17) நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் 1,021 வாக்குகள் பதிவானது.  அதில் ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணராஜ் 36 வாக்குகளும் மட்டுமே பெற்ற நிலையில், ராதாரவி 662 வாக்குகள் பெற்று தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைக் கேட்ட அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தார்கள் மகிழ்ந்தனர். மேலும், யூனியனின் 23 நிர்வாகிகளும் இந்தத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User