வறுமையும் சினிமாவுமே வாழ்க்கை.... யார் இந்த சத்யேந்திரா?
கலைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் எத்தனையோ கலைஞர்கள், அவர்கள் வாழும்போது கவனிக்கப்படாமலேயே காலத்தால் அடித்துச் செல்லப்படுகிறார்கள். சமீபத்தில் மறைந்த நடிகர், விமர்சகர், குறும்பட இயக்குநர் சத்யேந்திராவின் நினைவும் அப்படி அழியாத சுவடுகளாகப் படிந்த ஒன்றுதான்!
சத்யேந்திராவுக்கு பூர்வீகம் ஆந்திரா பிறந்து வளர்ந்தது பெங்களூரு. அப்பா சர்க்கிள் இன்ஸ்பெக்டர். உடன்பிறந்தவர்கள் எட்டுப் பேர். இவருக்கு 10 வயது இருக்கும்போதே அப்பா மறைந்துவிட்டார். பெங்களூருவில் எம்.ஏ. கன்னட இலக்கியம் படித்திருக்கிறார் ஆரம்ப கால கட்டத்தில் நடிகர். இயக்குநர் கிரிஷ் கர்னாட் நடத்திய பல கன்னட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். 1978-ல் கிரகணர் என்கிற திரைப்படத்தின் வழியேகன்னடத்தில் அறிமுகமாகிறார். ஆண்டுகளிலேயே அடுத்தடுத்த சென்னைக்கு ரகுவரனுடன் இணைந்து நடித்த இடம்பெயர்ந்தவர், எழாவது மனிதன் தமிழில் முதல் மண் திரைப்படம். தொடர்ந்து, மாசனை', 'சுடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'சத்யா உள்ளிட்ட படங்களில் வாய்ப்பு அமைகிறது. லெனின் இயக்கத்தில் இவர் நடித்த நாக் அவுட் திரைப்படம் கவனத்தை ஈர்த்தது. சத்யேந்திரா இயக்கிய வெட்டிங் அனிவெர்ஸரி குறும்படம் பலராலும் பாராட்டப் பட்டது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 18 மொழிகள் அறிந்தவர். குறிப்பாக பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் உள்ள பல புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பங்க மிகவும் முக்கியமானது. லிப்பூ மிதம் சேனல்கள் இவரின் மிமர்சனங்களையும், சினிமா பார்வையையும் தொடர்ந்து வெளி யிட்டன அது வழியே கிடைக்கும் சிறிய தொகையை வைத்துத் தினசரி வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார் பெரும்பாலும் ம. தான் அவருக்கு உணவு!
விளம்பரப் பட இயக்குநரும். சினிமா இணை இயக்குநருமான செந்தில்குமார் அர்ஜுனனுடன் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். கடந்த 12 ஆண்டுக் காலமாக அவரைத் தெரியும் நாகேஷ் சாரோட பயோ பிக்கைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்துச்சு சினிமா. எழுத்து வாசிப்பு பயணம்னு இருந்ததால் திருமணம் பத்தி யோசிக்கவே இல்லை. அதைப் பற்றி வீட்டிலும் யாரும் பேசவில்லை என்று சொல்லி வருத்தப்படுவார். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அது போத செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.
85உடனே பெங்களூருவில் உள்ள அவரது அக்காவுக்கும். அண்ணன் மகனுக்கும் தகவல் சொன்னேன். இறுதிச் சடங்குக்காக உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு போகும் அளவுக்குச் சூழல் இல்லை. இங்கேயே செய்யலாம் என அவர்கள் சொல்ல. உதவும் கைகள் அமைப்பு உள்ளிட்ட சில நண்பர்கள் சேர்ந்து அண்ணா நகர் மயானத்தில் இறுதி மரியாதை செய்தோம்!" என்றார். செந்தில்குமார் அர்ஜுனன்.
சத்யேந்திராவின் நினைவுகளைப் பற்றி நடிகர் நாசர் பகிரும்போது "ஒரு பாடத்தைப் பார்த்துவிட்டு அது சார்ந்து பேசும்போது ரொம்பவே வித்தியாசமாக இவரது கேள்விகள் இருக்கும். யோசிக்கவே முடியாத கோணத்தில் அவரது பார்வை இருக்கும். அபூர்வமான மனிதர். அவரை எல்லோரும் ப ஒரு சினிமாக்காரராகவே பார்க்கிறார்கள். அவர் பன்மொழி வித்தகர். இந்திய மொழிகளைக் கடந்து ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் ஞானம் பெற்றவர். எல்லோரும் அவரது வறுமையைப் பற்றி பேசுறாங்க. அதை அவரே தேர்வு செய்ததுதான்!
சம்பாதிக்கவேண்டும் என நினைத்திருந்தால் மொழிபெயர்ப்பிலோ, சினிம விவோ அதை ஈட்டி யிருக்கலாம். அதெல்லாம். இல்லாமல் நதியில் மிதக்கும் ஓர் இலை மாதிரி இருந்துவிட்டுப் போய்விட்டார். அவரது இழப்பு எனக்கும் அதிர்ச்சி யாசுவே இருந்தது" என்கிறார். இலக்கிய நிகழ்ச்சிகளிலும், கண்காட்சிகளிலும் இயக்குநர் பிருந்தா சாரதியுடன் அதிகம் சத்யேந்திராவைப் பார்க்க முடியும். உலக சினிமா எங்கே திரை யிடப்பட்டாலும், நல்ல இலக்கியக் கூட்டங்கள் எங்கே நடந்தாலும் ஓவிய, சிற்பக் கண்காட்சிகள் எங்கே நிகழ்ந்தாலும் அங்கே சத்யேந்திரா இருப்பார். உலகத் திரைப்பட விழாக்களில் அவற்றின் இயக்குநர்கள் வரும்போது அவர் களுடன் அந்தத் திரைப்படம் குறித்து அவர்கள் மொழியில் உரையாடும் மனிதராக சத்யேந்திரா இருந்தார். கலைஞன் ஒரு ஷாட்டில் கூட உயிர் வாழ முடியும். 'நாக் அவுட் சினிமாவின் உயரத்தில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பிர்கள். சத்யேந்திரா!" என்றார் பிருந்தா சாரதி.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)