கரூர் சம்பவம் : ஆதர் அர்ஜுனா வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை...

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனுதாக்கலை நாளை விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

Jul 06, 2026 - 07:19
0 288
கரூர் சம்பவம் : ஆதர் அர்ஜுனா வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை...

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கை சிபிஜ விசாரணைக்கு மாற்றியது.  இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது.

இதற்கிடையில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற தவெக இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காவல்துறையை வைத்துக்கொண்டு கரூர் மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார்.கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு உள்ளது.அதனை முடிக்காமல் விட மாட்டோம் என்று பேசினார். 

இந்த பேச்சு திமுகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக திமுகவின் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சார்பில் இடையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்திய பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாகவும் அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இத்தகைய நடவடிக்கைகள் சிபிஐ விசாரணையை பாதிக்கும் என்பதால் இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சிபிஐயின் அனுமதி பெற வேண்டும் என்றும், அதற்குரிய வழிகாட்டுதல்களை சுப்ரீம் கோர்ட்டு வகுக்க வேண்டும். அத்துடன் சிபிஐ விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதர் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த்,மற்றும் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் பொதுவெளியில் கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் இடையீட்டு மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று திமுகவின் மனுதாக்கலை ஏற்றுக்கொண்டு ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கை நாளை விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User