சென்னையில் பிரபல நடிகை வீட்டில் கொள்ளை- போலீஸ் விசாரணை

பிறந்தநாளையொட்டி நகைகளை அணிந்து வெளியே சென்றதால் கொள்ளை சம்பவத்தில் நகைகள் தப்பியது.இதனால் நடிகை நிம்மதி அடைந்தார்.

Nov 10, 2024 - 12:53
0 374
சென்னையில் பிரபல நடிகை வீட்டில் கொள்ளை- போலீஸ் விசாரணை

சென்னையில் சினிமா துணை நடிகையின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் பகுதியை சேர்ந்தவர் தீபா பாஸ்கர். முன்னனி நட்சத்திரங்கள் பலரோடு இணைந்து துணை நடிகையாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அவரது பிறந்தநாள் என்பதால் குடும்பத்தினரோடு வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்துள்ளது. பீரோவும் உடைக்கப்பட்டு,  அதில் இருந்த பொருட்களும் திருடப்பட்டுள்ளது.

இதனை கண்ட அவர் கதறி அழுத நிலையில், அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சேமித்து வைத்து இருந்த பணம் பீரோவில் வைக்காமல் வேறு இடத்தில் வைத்து இருந்ததால் பணம் தப்பிய நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு வெளியே சென்றதால் வீட்டில் வைத்து இருந்த நகைகளை அணிந்து சென்றதால் நகையும்  தப்பியுள்ளது.

வீட்டில் வைத்து இருந்த பொருட்கள்  மற்றும் 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மட்டும் திருடன் திருடி சென்றிப்பதை கண்டு நிம்மதியடைந்தார். இதையடுத்து, தீபா கொடுத்த புகாரில் அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User