‘ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும்’- மனமுருகி வேண்டிய மகள் செளந்தர்யா 

பக்தர் ஒருவர் ரஜினி சார் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு, அவர் தற்போது பெட்டராக இருக்கிறார் என்று சௌந்தர்யா கூறினார்.

Oct 03, 2024 - 14:29
0 234
‘ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும்’- மனமுருகி வேண்டிய மகள் செளந்தர்யா 

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நல பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்து வந்ததாகவும், ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை இன்றி ரத்த நாளத்தில் ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மருத்துவக்குழுவின் தீவிர மருத்துவ கண்காணிப்பில் ரஜினிகாந்த் உள்ளார். மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது இளைய மகள் சௌந்தர்யா தனது கணவருடன் பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் தந்தையின் உடல்நலம் தேறி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தார்.

அப்பொழுது அங்கிருந்த பக்தர் ஒருவர் ரஜினி சார் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு, அவர் தற்போது பெட்டராக இருக்கிறார் என்று சௌந்தர்யா கூறினார்.தியாகராஜ சுவாமி வடிவுஅம்மன் கோவிலில் உள்ள தியாகராஜ சுவாமி ஆதிபுரீஸ்வரர் வட்டப்பாறை அம்மன் வடிவுடையம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபட்ட பிறகு அருகில் இருக்கக்கூடிய வட குரு ஸ்தலம் என்று அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவிலில் வழிபாடு செய்தார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User