திருமாவளவன் இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என நினைக்கவில்லை- தமிழிசை சௌந்தராஜன் 

காந்திய கொள்கை மீது  முரண்பாடாக இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பை பற்றி பேசுவது எப்படி சரியாகும் என கேள்வி எழுப்பினார்.

Oct 03, 2024 - 15:07
0 231
திருமாவளவன் இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என நினைக்கவில்லை- தமிழிசை சௌந்தராஜன் 

பாரதிய ஜனதா கட்சியினுடைய உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிது. இந்த நிலையில் கோவை, தென்சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களின் பொறுப்பாளரும், முன்னாள் தெலுங்கானா புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டார். 

 இந்நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாஜக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பல்வேறு இடங்களில் கணிசமான உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார். 

மேலும், நேற்று நடந்த விசிக மது ஒழிப்பு  மாநாட்டில் திருமாவளவன் பேசியது குறித்தான செய்தியாளர் கேள்விக்கு, இதற்கு முன் இருந்தே திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவனுக்கு திடீரென்று மது ஒழிப்பு கொள்கையை முன்னெடுப்பது ஆச்சரியமாக உள்ளது. தன் கட்சியை சார்ந்த ஒருவரை பேச வைத்து விட்டு அதிக சீட்டுக்காக  இந்த மாநாட்டை நடத்துகிறார் என தமிழிசை விமர்சனம் செய்தார். 

மேலும் காந்திய கொள்கை மீது  முரண்பாடாக இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பை பற்றி பேசுவது எப்படி சரியாகும் என கேள்வி எழுப்பினார். அரசியல் வாழ்வில் இதுவரை தனிநபர் தாக்குதல்  நான் நடத்தவில்லை.ஆனால் திருமாவளவன் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவார் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மேலும் பாட்டிலை திறக்கிறார் என்று நான் சொல்லவில்லை, அவர்தான் பேசினார். தன் தொண்டர்களுக்கு அகிம்சை வழிக்கு முரணாக திருப்பி அடி என்று கற்றுக் கொடுத்ததும் அவர்தான். அண்ணன் திருமாவளவன் அரசியல் காலத்தில் இதுவரை பேசிய உரையில் நேற்று பேசியது  அவர் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளி என்றும் தமிழிசை கருத்து தெரிவித்தார்.

முன்னதாக நேற்று நடந்த விசிக மாநாட்டில் பேசிய திருமாவளவன், தனக்கு குடிப்பழக்கம் இல்லை. மதுபாட்டிலை தொட்டுக்கூட பார்த்ததில்லை. தமிழிசை செளந்தரராஜனும் மதுகுடிக்க மாட்டார் என்று நம்புகிறேன் என்றும் மகாத்மா காந்தி, ராஜாஜி கட் அவுட் வைத்ததற்கான காரணம் குறித்தும் விளக்கி பேசினார். மாநாட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குறித்து திருமாவளவன் பேசி இருந்தது நிலையில் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User