கங்குவா படக்குழுவில் ஒருவர் திடீர் மரணம்...

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுஃப் (43) திடீர் மரணம்; உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை; RJ பாலாஜி இயக்கும் சூர்யா-45 படத்திற்கும் நிஷாத் எடிட்டராக கமிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Oct 30, 2024 - 09:15
0 221
கங்குவா படக்குழுவில் ஒருவர் திடீர் மரணம்...

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுஃப் (43) திடீர் மரணம்; உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை; RJ பாலாஜி இயக்கும் சூர்யா-45 படத்திற்கும் நிஷாத் எடிட்டராக கமிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

கங்குவா நவம்பர் 14ம் தேதி ரிலீஸாகவுள்ளது. முன்னதாக கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிளான ‘யோலோ’ என்ற பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில், கங்குவா படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பாடலாசிரியரும் ஸ்க்ரிப்ட் ரைட்டருமான மதன் கார்க்கி தான், கங்குவா படம் குறித்து ட்வீட் செய்திருந்தார்.

”இந்தப் படத்தின் வசனங்களை இயக்குநர் சிவாவுடன் மதன் கார்க்கியும் இணைந்து எழுதியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து இந்தப் படம் குறித்து ட்வீட் செய்துள்ள அவர், “இன்று கங்குவாவின் முழு போர்ஷனையும் பார்த்தேன். டப்பிங் செய்யும் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன், ஆனாலும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கங்குவா படத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுஃப் (43) திடீர் மரணம்; உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை; RJ பாலாஜி இயக்கும் சூர்யா-45 படத்திற்கும் நிஷாத் எடிட்டராக கமிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User