கொட்டும் மழையிலும் நன்றி... தோட்டத் தொழிலாளர்களை வியக்க வைத்த ஆ.ராசா..!

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த தோட்டத் தொழிலாளர்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கொட்டும் மழையில் நன்றி தெரிவித்தார். 

Oct 07, 2024 - 10:20
0 218
கொட்டும் மழையிலும் நன்றி... தோட்டத் தொழிலாளர்களை வியக்க வைத்த ஆ.ராசா..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் ஓவேலி பேரூராட்சியில், நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்துகொண்டார். 

அப்போது மழை பெய்யத் தொடங்கினாலும், அந்த கொட்டும் மழையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் தனது நன்றியினை தெரிவித்தார். ”இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த நீலகிரி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் மக்களின் தேவைகளை அறிந்து குரல் கொடுப்பேன்” என்று ஆ.ராசா தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார், பேரூர் கழகச் செயலாளர் சின்னவர் உட்பட திமுகவினர் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User