ஜாபர் சாதிக் வழக்கு.. அமீரை விடாது கருப்பாக விரட்டும் NCB..மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

Apr 09, 2024 - 13:37
0 206
ஜாபர் சாதிக் வழக்கு..  அமீரை விடாது கருப்பாக விரட்டும் NCB..மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குநர் அமீர் மீண்டும்  விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் சமீபத்தில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மார்ச் 9-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியதும், 'இறைவன் மிகப்பெரியவன்', 'மங்கை' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்தது. 

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பராக இருந்த இயக்குநர் அமீர், கடந்த 2-ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், ஜாபர் சாதிக் யார் யாரை சந்தித்தார்? என்னென்ன வழிகளில் பணத்தை செலவழித்தார் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், ரம்ஜான் பண்டிகைக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக நேற்று (ஏப்ரல் 8) மின்னஞ்சல் மூலம் அமீர் கடிதம் அனுப்பியிருந்தார். 

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தற்போது அமலாக்கத்துறையும் களமிறங்கியுள்ளது. சென்னையில் ஜாபர் சாதிக்கின் வீடு, அலுவலகம் மற்றும் இயக்குநர் அமீரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனைக்கு மத்தியில் இயக்குநர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தேதி குறிப்பிடாமல் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. அமீர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் என்னென்ன? வங்கிக் கணக்கு விவரம் மற்றும் ஜாபர் சாதிக்குடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User