கப்பலூர் டோல் கேட் .. அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு... வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

Apr 16, 2024 - 14:02
Updated: 2 years ago
0 218
கப்பலூர் டோல் கேட் .. அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு... வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிட்கோ பகுதி வணிகர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, நகர்புற எல்லையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால், விதிமுறைக்கு புறம்பாக 2 கிலோமீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடியை வைத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நடத்தும்போது கட்டண விலக்கு அளிப்பதும், பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுமாக சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் உள்ளூர் வாகன உரிமையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வருகிறது. தொகுதி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் முதல் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்ததால், கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். 

அங்குள்ள அனைத்து கடைகளிலும் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.  தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் விதிமுறைக்கு புறம்பாக உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு தலைமையில் திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவுடன் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் அனைத்து வியாபாரிகள் சங்கம், மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கம் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை நிறைவேற்றும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User