மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்... அதிகாரிகளின் ஆய்வால் முகம்சுழிக்கும் பொதுமக்கள்...

Apr 07, 2024 - 02:53
0 191
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்... அதிகாரிகளின் ஆய்வால் முகம்சுழிக்கும் பொதுமக்கள்...

மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் உறுதி செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிறுத்தை,  ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள கருவேலங்காட்டு பகுதிக்கு  சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் நான்கு நாட்களாக ஈடுபட்டுள்ளனர். மேலும், சித்தர்காடு மற்றும் ரயில் நிலையம் அருகே இரண்டு ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 இதனிடையே  கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர், சனிக்கிழமை அன்று ஆரோக்கியநாதபுரம் பகுதியில் மோப்பநாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாலை நேரத்தில், அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டார். இதுபோக கூடுதலாக திருப்பூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டு ஆரோக்கியநாதபுரம், திருநாள்கொண்டச்சேரி, ரயில் நிலையம் அருகே உள்ள பகுதி உள்ளிட்டவற்றில் 7 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வழுவூர், கோவங்குடி, மறையூர்  ஆகிய பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் இருக்கலாம் என்ற கோணத்தில், அங்கு அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். எனவே ஆய்வு குறித்த முறையான அறிவிப்புகளை அதிகாரிகள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கிராமவாசிகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User