கனமழை அலர்ட்...இந்த மாவட்டங்கள்ல இருக்கவங்க எச்சரிக்கையா இருங்க மக்களே!
மதுரை, தேனி தென்காசி உட்பட தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மதுரை, தேனி தென்காசி உட்பட தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து அம்மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தேனியில் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதேபோல கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)