தமிழக மீனவர்கள் பிரச்னை; ஜெய்சங்கருக்கு ராகுல் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Sep 28, 2024 - 19:46
0 174
தமிழக மீனவர்கள் பிரச்னை; ஜெய்சங்கருக்கு ராகுல் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 21ஆம் தேதி மயிலாடுதுறைச் சேர்ந்த மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல்,  37 மீனவர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் ஓய்வதற்குள், கடந்த 23-ஆம் தேதி மீண்டும் கன்னியாகுமரியைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இந்நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவதாகவும், கடந்த 21ஆம் தேதி கைதான மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே போல், மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இலங்கை அதிகாரிகளுடன் பேசி தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User