”திமுகவை ஒழித்த பிறகு தான் தீபாவளி….” – எல்.முருகன்!

2026ல் திமுக என்கின்ற நரகாசுரனை ஒழித்த பிறகு தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

Oct 31, 2024 - 20:34
0 280
”திமுகவை ஒழித்த பிறகு தான் தீபாவளி….” – எல்.முருகன்!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது இல்லத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி  தீபாவளி பண்டிகை கொண்டாடினார். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “உலகம் முழுவதும் இருக்கும் தமிழக மக்கள், சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபாவளி இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்க கூடியதாக நிச்சயம் அமையும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டப் பிறகு முதல் தீபாவளியாக இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு தீய விஷயங்களை ஒழிக்க வேண்டும். நாட்டின் வளச்சிக்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். 

திமுக என்கின்ற நரகாசுரனை 2026ல் ஒழித்த பிறகு தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவோம். தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவே மாட்டோம் என இருந்தவர்கள் தற்போது தன்னை நம்பி இருக்கிறவர்களுக்காகவாவது ஏதோ வாயை திறந்து வாழ்த்தி இருக்கிறார்கள். அரசியலுக்கு புதிதாக வந்துள்ள தவெக தலைவர் விஜய் கூட தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். அவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள். தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம் உள்ளது. அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். அனைவருக்கும் பொதுவானவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். அவர் ஏன் வாழ்த்து சொல்வதில்லை? அவரும் வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User