இந்தியன் 2 : ஒரு வீடு செட் மட்டுமே ரூ. 8 கோடி... கமல் ரசிகர்கள் கொந்தளிப்பு!

பாக்ஸ் ஆஃபீஸையே கவுத்த இந்தியன் 2 படத்தில் ஒரு வீடு செட் மட்டும் ரூ. 8 கோடிக்கு போடப்பட்டதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

Aug 21, 2024 - 16:06
0 348
இந்தியன் 2 : ஒரு வீடு செட் மட்டுமே ரூ. 8 கோடி... கமல் ரசிகர்கள் கொந்தளிப்பு!
இந்தியன் 2 : ஒரு வீடு செட் மட்டுமே ரூ. 8 கோடி

சென்னை: கமல் – ஷங்கர் காம்போவில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. 1996ம் ஆண்டு ரிலீஸான இந்தியன் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்திருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் இந்தியன் தாத்தா சேனாபதி இந்தியாவில் இருந்து தப்பிவிடுவதாக முடித்திருந்தார் இயக்குநர் ஷங்கர். இதனால் அப்போது முதலே இந்தியன் 2 படத்துக்கு ஹைப் இருந்தது. கமல், இயக்குநர் ஷங்கர் இருவரிடமும் இந்தியன் 2 எப்போது உருவாகும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர்.   

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 2018ல் இந்தியன் 2 ப்ராஜெக்ட்டை தொடங்கினார் ஷங்கர். லைகா தயாரிப்பில் கமல், ஷங்கர் இருவரும் மீண்டும் இணைய, இவர்களுடன் ஏஆர் ரஹ்மானுக்குப் பதிலாக அனிருத் உள்ளே வந்தார். அப்போதே ரசிகர்களுக்கு இந்தக் கூட்டணியில் கொஞ்சம் அதிருப்தி இருந்தது. ஆனாலும், அனிருத் அடுத்தடுத்து ஹிட் கொடுத்துக்கொண்டே வந்ததால், இந்தியன் 2வில் ஏதாவது மேஜிக் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரெய்லர் ஆகியவற்றில் அனிருத்தின் இசை ரசிகர்களை ஏமாற்றிவிட்டது.

சரி ஆனது ஆகட்டும், படமாவது செமையாக இருக்கும் என ரசிகர்கள் ஃபயர் விட்டு வந்தனர். ஆனால், கடந்த வாரம் ரிலீஸான இந்தியன் 2, ரசிகர்களை கதறவிட்டுள்ளது. ஷங்கரின் பெரும் பலமாக காணப்பட்ட எழுத்தாளர் சுஜாதாவும், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானும் இல்லையென்றால், என்னவாகும் என்பதற்கு உதாரணமாக இந்தியன் 2 அமைந்துள்ளது. 5 ஆண்டுகளாக பல தடைகளை கடந்து வெளியான இந்தியன் 2, முதல் நாளில் இருந்தே நெகட்டிவான விமர்சனங்களால் தடுமாறியது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தியன் 2 படத்துக்கு எதிர்பார்த்த கலெக்ஷன் கிடைக்கவில்லை.  ஒருகட்டத்தில் இந்தியன் 2 டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். இதனால் படக்குழுவினர் டிப்ரெஷன் மோடில் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: ‘உசுரே நீதானே நீதானே.... நிழலா உன் கூட நானே.....’; வைப் மெட்டீரியலாக மாறிய ‘அடங்காத அசுரன்’
 

கிட்டத்தட்ட ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தியன் - 2, இப்போதிருக்கும் நிலையை பார்த்தால் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனில் 150 கோடி வசூலை கடப்பதே பெரும்பாடுதான் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் பேசியிருந்த நடிகர் எஸ்.ஜே. சூர்யா இப்படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார். அதில், 'இந்தியன் 2’ படத்துல நான் இருக்குற வீடு செட் மட்டுமே ரூ. 8 கோடி. அது மாதிரி மொத்தம் 20 செட் போட்டோம். இது இல்லாம பாட்டு, ஃபைட்டுன்னு தனித்தனியா செட் இருந்துச்சு” என கூறியுள்ளார். இதைக் கேட்ட கமல் ரசிகர்கள், செட் போட்ட நேரத்துல ஸ்கிரிப்ட் ஒழுங்கா எழுதியிருக்கலாம் என விமர்சித்து வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User