விவாதத்திற்கு அழைத்தால் நான் செல்வேன் - இபிஎஸ்க்கு உதயநிதி ஸ்டாலின் பதில்
திட்டங்களுக்கு தொடர்ந்து கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்படுகிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு, வேறு யார் பெயரை வைக்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து விவாதிக்க கூப்பிட்டால் நான் செல்வேன் என எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். பின்னர் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் மற்றும் தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட விளையாட்டு வளாகங்கள், ராணிப்பேட்டையில் 1500 ஏக்கரில் 15 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் மற்றும் மதுரையில் 6 கோடி ரூபாய் மதிப்பில் ஒலிம்பிக் அகாடமி மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளில் விளையாட்டுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் காரணமாக, விடுதிகளில் 2300 ஆக இருந்த வீரர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2600 ஆக உயர்ந்துள்ளது.மாணவர்களுக்கான உணவு ஒதுக்கப்பட்ட தொகை நாள் ஒன்றுக்கு 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய் ஆகவும், சீருடைக்கான கட்டணம் 4000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தியும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.மேலும், எஸ்டிஏடி விளையாட்டு விடுதிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக இந்த ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் வருவாய் 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுக ஆட்சியிலா? திமுக ஆட்சியிலா?யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து விவாதிக்க தான் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். விவாதத்திற்கு அழைத்தால் நான் செல்வேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
மேலும், திட்டங்களுக்கு தொடர்ந்து கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்படுகிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு, வேறு யார் பெயரை வைக்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.சென்னையில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கு பணிகள் தாமதத்திற்கு நிலமெடுப்பதில் சில பிரச்னைகள் இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)