எப்படி இருக்கிறார் ரத்தன் டாடா ? - உடல் நிலை குறித்து புதிய அப்டேட்

ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது.

Oct 07, 2024 - 16:40
0 216
எப்படி இருக்கிறார் ரத்தன் டாடா ? - உடல் நிலை குறித்து புதிய அப்டேட்
எப்படி இருக்கிறார் ரத்தன் டாடா ? - உடல் நிலை குறித்து புதிய அப்டேட்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், உடல் நிலை குறித்து ரத்தன் டாடா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று நள்ளிரவு உடல்நலகுறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. இதனால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அவசர சிகிச்சை பிரிவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் ரத்தன் டாடா உள்ளதாகவும், அவரின் உடல் நிலை சற்று சவலைக்கிடமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்த நிலையில், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ரத்தன் டாடா தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியதாவது,  எனது உடல் நிலை குறித்து சமீபத்துல் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன். ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.  யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. ஊடகங்களில் தவறான தகவல் பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User