ஹார்த்திக் பாண்டியா அணிந்திருந்த ரிச்சர்ட் மில்லே வாட்ச்.. இவ்வளவு கோடியா?

மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்த ஹார்த்திக் பாண்டியா அணிந்திருந்த விலையுயர்ந்த கடிகாரம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Jun 30, 2025 - 12:00
Updated: 1 year ago
0 463
ஹார்த்திக் பாண்டியா அணிந்திருந்த ரிச்சர்ட் மில்லே வாட்ச்.. இவ்வளவு கோடியா?
hardik pandya expensive watch richard mille rm 67-02 sébastien ogier watch

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களுள் ஒருவரான ஹார்த்திக் பாண்டியா, இயல்பாகவே பேஷன் ஸ்டைல் மிக்க ஆள். உடுத்தும் உடை, ஹேர் ஸ்டைல் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துவார். ஆடுகளத்தை தாண்டி வெளிப்புறத்தில் அவர் உலா வரும் போது எல்லாம், அவரது ஸ்டைலிஸான லுக்கும், ஆடையும் நிச்சயம் அனைவரின் கவனத்தினை ஈர்க்கும்.

ரிச்சர்ட் மில்லே RM 67-02 செபாஸ்டியன் ஓஜியர் வாட்ச்:

இந்த வகையில் தான் கடந்த 28 ஆம் தேதி மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்த ஹார்த்திக் பாண்டியா கருப்பு நிற பேண்ட், பல வண்ணங்கள் மிக்ஸ் ஆன ஒரு ஸ்வெட்டர் அணிந்திருந்தார். கழுத்தில் தனித்துவமான வெள்ளி செயின், வலது கையில் பளபளப்பான ப்ரேஸ்லேட் போன்றவற்றுடன் கருப்பு சன்கிளாஸ் அணிந்திருந்தார். ஆனால், இதையெல்லாம் தாண்டி ரசிகர்களை ஈர்த்தது என்னமோ ஹார்த்திக் பாண்டியா கையில் அணிந்திருந்த மிகவும் ஆடம்பரமான ரிச்சர்ட் மில்லே RM 67-02 செபாஸ்டியன் ஓஜியர் வாட்ச் தான்.

இந்திய மதிப்பில் இதன் விலை, சுமார் ரூ.3.37 கோடியாகும். ரிச்சர்ட் மில்லே RM 67-02 செபாஸ்டியன் ஓஜியர் வாட்ச் விலையுயர்ந்த கடிகாரம் மட்டுமில்ல, தொழில்நுட்ப ரீதியிலும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு வாட்ச் ஆகும். ஒட்டுமொத்த வாட்சின் எடை வெறும் 32 கிராம் தான் என்றால் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள், இந்த வாட்ச் கைகளில் எந்தளவிற்கு கச்சிதமாக இருக்கும் என.

அப்படி என்ன ஸ்பெஷல்?

விளையாட்டு வீரர்களாகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த வாட்சில் தடகள செயல்பாடுகளை மானிட்டர் செய்வதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. ரிச்சர்ட் மில்லே தயாரிப்பு வாட்ச்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உலகெங்கும் உள்ளது. கார் பந்தயங்களில் உலக சாம்பியனான செபாஸ்டியன் ஓஜியருடன் இணைந்து இந்த வாட்ச் பிரத்யேக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டது.

இது கார்பன் TPT (carbon Thin Ply Technology) மற்றும் குவார்ட்ஸ் TPT போன்ற அதிநவீன பொருட்களால் இந்த வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரம் சுமார் 50 மணிநேரம் (± 10%) பவர் ரிசர்வ் கொண்டுள்ளது. கேஸின் பரிமாணம் சுமார் 38.7 மிமீ x 47.52 மிமீ மற்றும் தடிமன் சுமார் 7.8 மிமீ ஆகும். மேலும், 30 மீட்டர் / 165 அடி வரை நீர் புகாத தன்மையைக் (Water Resistance) கொண்டுள்ளது இந்த வாட்ச்.

ரிச்சர்ட் மில்லே RM 67-02 செபாஸ்டியன் ஓஜியர் வாட்ச், அதன் தனித்துவமான வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் செபாஸ்டியன் ஓஜியர் போன்ற உலக சாம்பியன் கார் ஓட்டுநருடன் கொண்ட தொடர்பு காரணமாக ஆடம்பர கடிகாரம் மீது விருப்பம் கொண்டவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பரவலாக விரும்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User