விரைவில் வடசென்னை 2… தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!

தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணி படம், வடசென்னை 2 என அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி தனுஷ் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. 

Jun 20, 2026 - 05:05
0 200
விரைவில் வடசென்னை 2… தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!
dhanush mari selvaraj vada chennai 2 update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கர’. இதனைத் தொடர்ந்து, அடுத்து எந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த படம் தொடர்பாகவும் அப்டேட்கள் வெளியாகமலே இருந்தன. 

இந்நிலையில், தற்போது தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட் வெளியாகியுள்ளது. 

கர்ணன் படம் மூலமாக ஹிட் அடித்த தனுஷ் – மாரி காம்போ, மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், அதனை உறுதிப்படுத்தியுள்ளார் பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ். சமீபத்தில் அவர் அளித்த ஒரு சிறப்புப் பேட்டியில், இந்த புதிய திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் மிக பிரம்மாண்டமான முறையில் தொடங்கவிருப்பதாக கூறினார். மீண்டும் கர்ணன் காம்போ என்ற செய்தி ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. 

தொடர்ந்து, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் தனுஷின் மற்றொரு படத்தின் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இதுதான் ஹைலைட்டே. காரணம், வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரகனி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து, சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வடசென்னை படத்தின் 2 ஆம் பாகம் அப்டேட் தான் அது. வெற்றி மாறன், தனுஷ் ஆகியோர் எங்கு சென்றாலும் அவர்களிடம் கேட்கப்பட்டு வந்த ஒரே கேள்வி, “வடசென்னை 2” எப்போது என்பதுதான். 

இந்த நிலையில், ரசிகர்களின் பல ஆண்டுக்கால காத்திருப்புக்கு விடையளித்துள்ளார் ஐசரி கணேஷ். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் முடித்த கையோடு, நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த வடசென்னை ’அன்பு’வின் அதிரடி ஆட்டம் தொடங்க உள்ளது.

ஒரு பக்கம் மாரி செல்வராஜின் முற்றிலும் வித்தியாசமான புதிய கதைக்களம், மறுபக்கம் பல வருடக் காத்திருப்பான வெற்றிமாறனின் மாஸ்டர் பீஸ் என இரண்டு மிகப்பெரிய பிரம்மாண்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசைகட்டி இருப்பதால் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User