கரூரில் மக்கள் வெள்ளம்... முதல்வர் விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு

கரூர் அட்லஸ் மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Jul 10, 2026 - 07:11
Updated: 17 days ago
0 198
கரூரில் மக்கள் வெள்ளம்... முதல்வர் விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு

கரூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கரூர் மக்கள் சந்திப்பு கூட்டம் அட்லஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில் சுமார் 5000 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கிய  நிலையில் இதில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து கரூருக்கு காரில் சாலைமார்க்கமாக நிகழ்ச்சி  நடைபெறும் இடத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்.

சாலையில் நெடுந்தோறும் மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன் பூக்களை எல்லாம் வீசி முதலமைச்சர் விஜயை வரவேற்றனர்.நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் விஜயை அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த்,ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண் ராஜ், தவெகவின் நிர்வாகிகள் விஜயபாஸ்கர்,எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சி மேடைக்கு வந்த முதலமைச்சர் விஜயை கண்டதும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து நிகழ்ச்சி தொடங்கி
முதலில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் முதலமைச்சரை வரவேற்று நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

முதலமைச்சர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலையை பரிசளித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதி சிறப்புரை ஆற்றினார். கரூர் சம்பவம் நடைபெற்று 280 நாட்களுக்கு பிறகு முதன்முதலில் கரூர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User