அமைச்சரவை மாற்றம் விரைவில்? ஹிட் லிஸ்டில் 10 அமைச்சர்கள்..?

அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதால் முதலமைச்சர் விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jul 05, 2026 - 04:30
0 253
அமைச்சரவை மாற்றம் விரைவில்? ஹிட் லிஸ்டில் 10 அமைச்சர்கள்..?

தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுவதாவது, புதிய அமைச்சர்களுக்கு நிர்வாக அனுபவம் இல்லாவிட்டாலும் காலப்போக்கில் தங்களின் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே முதல்வர் விஜய் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில அமைச்சர்கள் பொதுமக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவது அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அமைச்சர் சரத்குமார் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் முதல்வரின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பெண் அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெதீஸ்வரி, அமைச்சர் பிரபு உள்ளிட்டோரின் செயல்பாடுகள் குறித்தும் கட்சித் தலைமையிடம் புகார்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமைச்சர்கள் கமலி, ரஞ்சித்குமார், ராஜீவ், விஜய் பாலாஜி, ஸ்ரீநாத் மற்றும் குமார் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்தும் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. மக்கள் சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், சர்ச்சைகளில் சிக்காமல் செயல்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து எழுந்துவரும் புகார்கள் காரணமாக அமைச்சர்களின் செயல்திறன் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User