டன் கணக்கில் குவிந்த பட்டாசு குப்பைகள்...அகற்ற தூய்மைப் பணியாளர்கள் தீவிரம்

சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Nov 01, 2024 - 09:14
0 242
டன் கணக்கில் குவிந்த பட்டாசு குப்பைகள்...அகற்ற தூய்மைப் பணியாளர்கள் தீவிரம்

சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும்,  தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளியான நேற்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மின்கம்பங்கள், மின்விளக்குகள் மற்றும் வாகனங்களுக்கு அருகே பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்கும் போது தண்ணீர் மற்றும் மணல் வாளியை அருகில் வைத்துக் கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளியின் காரணமாக நேற்று காலை முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பைகள் சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன.

 இப்படி டன்கணக்கில் பல்வேறு இடங்களிலும் கிடக்கும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை முதலே அப்புறப்படுத்தும் பணியில் வேகம் காட்டி வருகின்றனர். பட்டாசு குப்பைகளை தனியாகவும் வழக்கமான குப்பைகளைத் தனியாகவும் சேகரிப்பதாக தூய்மைப்பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி சேகரிக்கப்படும் பட்டாசு குப்பைகளை 2 கண்டெய்னர்களில் கும்மிடிப்பூண்டிக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User