சினிமா பாணியில் காரை வழிமறித்து தங்க நகைகள் கொள்ளை- சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

திருச்சி  குதிரான் அருகே கல்லிடுக்கில் பகுதியில் மூன்று கார்களில் வந்த பத்து பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

Sep 26, 2024 - 10:46
0 300
சினிமா பாணியில் காரை வழிமறித்து தங்க நகைகள் கொள்ளை- சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

கோவையிலிருந்து கேரளாவுக்கு சென்ற காரை வழிமறித்து சினிமா பாணியில் இரண்டரை கிலோ தங்க நகைகளை பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையிலிருந்து கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு தங்க நகை வியாபாரியான அருண் சன்னி மற்றும் அவரது நண்பர் ரோஜி தாமஸ் ஆகியோர் காரில் 2½ கிலோ  எடையுள்ள தங்க நகைகளை வியாபாரத்திற்கு கொண்டு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட  குதிரான் அருகே கல்லிடுக்கில் பகுதியில் செல்லும்போது மூன்று கார்களில் வந்த பத்து பேர் கொண்ட கும்பல் அருண் சன்னியின் காரை வழிமறித்து நின்றது. 

தொடர்ந்து காரிலிருந்த இருவரையும் கடுமையாக தாக்கியதோடு கத்தியை காட்டி மிரட்டி அவர்களது காரில் ஏற்றிக்கொண்டு சென்று மிரட்டியுள்ளனர்.  பின்னர் இருவரையும் வெவ்வேறு இடங்களில் இறக்கிவிட்ட அக்கும்பல் அருண் சன்னியின் காருடன்  நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பின்னர், அருண் சன்னியை புத்தூரில் இறக்கி விட்டுள்ளனர், ரோஜி தாமஸிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவம் தொடர்பாக பீச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளைக்கும்பலை தேடி வருகின்றனர். 

பட்டப்பகலில் காரை வழிமறித்து இரண்டரை கிலோ தங்கத்தை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User