பாஜக ஆளும் மாநிலங்களில் இதை செய்யலாமே? - எச்.ராஜாவுக்கு கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தல்

முன் மாதிரியாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்

Oct 02, 2024 - 18:01
0 227
பாஜக ஆளும் மாநிலங்களில் இதை செய்யலாமே? - எச்.ராஜாவுக்கு கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தல்

முன் மாதிரியாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என எச்.ராஜாவுக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது, மது மாநில கொள்கையில் மட்டும் தான் உள்ளது.அது மத்திய அரசு கொள்கை இல்லை. மதுக்கடைகளை திறப்பது திமுக அரசு. கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த சம்பவத்தில் திமுகவிற்கு வெட்கமே இல்லை. இந்த ஆண்டு 1,700 கோடி ரூபாய் மதுக்கடை மூலம் அதிக வருமானம் வந்துள்ளது என்பது திமுக கூறியிருப்பது வெட்கக்கேடான விஷயம் என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், மதுக்கடைகளை திறந்தவர்களே தான் மூட வேண்டும் என்கிறார்கள். திமுக அரசு மதுக்கடைகளை திறந்து விட்டு சாவிகளை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளனரா? என்று கேள்வி எழுப்பிய அவர், இது மாநில அரசின் கொள்கை, திறந்தவர்கள் தான் மூட வேண்டும். மேலும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், சிவகங்கை காங்., எம்.பி., கார்த்திக் சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என எச்.ராஜா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, முன் மாதிரியாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பூரண மதுவிலக்கை கொண்டு வர என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User