ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது நேர்ந்த விபரீதம்; சிறுவன் உயிரிழப்பு!

அரசுப் பேருந்து ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை.

Mar 15, 2024 - 21:35
0 220
ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது நேர்ந்த விபரீதம்; சிறுவன் உயிரிழப்பு!

சென்னையில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்று கீழே விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பிராட்வேயில் இருந்து திருவிகநகர் நோக்கி அரசுப் பேருந்து  ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, படியில் தொங்கியபடி பயணம் செய்த கொடுங்கையூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் விக்னேஷ், திருவிக நகர் எஸ்ஆர்பி கோயில் வடக்கு தெரு மசூதி முன்பு ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்த நிலையில் விக்னேஷின் தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், படுகாயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

இதையடுத்து, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சிறுவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்து ஓட்டுநர் தனசேகரனை விசாரித்து வருகின்றனர்.  பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனிடையே விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 2
Angry Angry 0

Comments (0)

User