கடைசி பந்து வரை போராடிய RCB... வீணான போராட்டம்... 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி...   

Apr 21, 2024 - 22:04
0 573
கடைசி பந்து வரை போராடிய RCB... வீணான போராட்டம்... 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி...   

ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், கடைசி பந்து வரை போராடிய பெங்களூரு அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.   

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய தினம் (ஏப்ரல் 21) 2 லீக் போட்டிகள் நடைபெறும் நிலையில், முதல் போட்டியில், கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ ப்ளசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 50 ரன்களும், சால்ட் 48 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதனை தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி விளையாடிய பெங்களூரு அணியில் அதிரடியாக தொடங்கிய விராட் கோலி, 18 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்சித் ராணா பந்துவீச்சில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழக்க, டு பிளெஸ்சிசும் 7 ரன்களில் அவுட் ஆனார். 

இதனையடுத்து, இணைந்த வில் ஜேக்ஸ் – படிதார் ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு நம்பிக்கையை கொடுத்தனர். கொல்கத்தாவின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் இருவரும் ரசல் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

தொடர்ந்து களமிறங்கிய கிரீன் 6 ரன்களிலும், மஹிபால் லாம்ரோர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் அடித்தார். இதனால் பெங்களூரு அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. 

ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் கரன் ஷர்மா 3 சிக்சர்கள் அடித்தார். கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கரண் ஷர்மா ஆட்டமிழந்தார். இதனால் கடைசி பந்தில் வெற்றி பெற பெங்களூரு அணிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 1 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா புள்ளி பட்டியலிலும் 2-வது இடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்டுகளும், நரைன் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User