அமரன் படத்தால் வந்த மன உளைச்சல் - நீதிமன்றம் சென்ற மாணவர்

அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Dec 04, 2024 - 19:27
Updated: 2 years ago
0 331
அமரன் படத்தால் வந்த மன உளைச்சல் - நீதிமன்றம் சென்ற மாணவர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் தனது மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி  பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் திரைப்படத்தில், கதாநாயகி சாய்பல்லவியின் மொபைல் எண் என்று தனது எண்ணை காண்பித்ததால், பலர் அந்த எண்ணை தொடர்பு கொண்டதால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த வாகீசன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்ததால், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என குறிபிட்டுள்ளார்.இதனால், தன்னால் படிக்க முடியவில்லை, பயணிக்க முடியவில்லை என்றும், மொபைலை ஏரோப்ளேன் மோடுக்கு மாற்றுவதற்குள் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு  ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தயாரிப்பாளரும், இயக்குநரும் தான் காரணம் என சொல்ல தேவையில்லை என்றும், இதுகுறித்து அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றும் அந்த தவறை அவர்கள் திருத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதனால் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன என்றும், அரசியல் சாசனம் தனக்கு வழங்கியுள்ள வாழ்வுரிமை, அந்தரங்க உரிமைகள் பாதிக்கப்படுவதால் ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை இழ்ப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User