Amaran Release Date: தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் அமரன்... அப்போது அஜித்தின் விடாமுயற்சி?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Jul 17, 2024 - 17:33
0 742
Amaran Release Date: தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் அமரன்... அப்போது அஜித்தின் விடாமுயற்சி?
Amaran Release Date

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோ பிக்காக உருவாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன், தீவிரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்தார். அமரன் படத்தில் அவரது கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். 

ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் முதல் படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் முதல் கூட்டணி, அதேபோல் ஜிவி பிரகாஷ் இசையிலும் சிவகார்த்திகேயனுக்கு இது முதல் படமாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், சிவகார்த்திகேயன் ஆர்மி ஆபிஸராக நடித்துள்ள முதல் படமாகவும் அமரன் உருவாகியுள்ளது. இதற்காக நிஜமான ஆர்மி மேன் போலவே மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள அமரன் படத்திற்கு, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அக்டோபர் 31ம் தேதி ரிலீஸாகிறது. இதுவரை தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்கள் குறித்து அபிஸியல் அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருந்தது. விஜய்யின் தி கோட் செப்டம்பர் 5ம் தேதியும், ரஜினியின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா படங்கள் அக்டோபர் 10ம் தேதியும் வெளியாகின்றன. சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் ரிலீஸ் தேதி இன்னும் கன்ஃபார்ம் ஆகவில்லை. முக்கியமாக அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தேதியும் இன்னும் அறிவிக்கவில்லை. 

ஆனால், அஜித்தின் விடாமுயற்சி படத்தை தீபாவளி ரேஸில் களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதுபற்றி அபிஸியலாக அப்டேட் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளி ரிலீஸ் உறுதி என்றே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனின் அமரன் ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது. ஒருவேளை அஜித்தின் விடாமுயற்சியும் தீபாவளிக்கு வெளியானால், ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனமான லைகா தரப்பில் இருந்து இதுவரை எந்த சிக்னலும் வரவில்லை.

அமரன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால், இனிவரும் நாட்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரெய்லர் ஆகியவை ரிலீஸ் பற்றி அறிவிப்புகள் வெளியாகும். அதேபோல் அமரன் படத்தின் ப்ரோமோஷனையும் படக்குழு தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதி ஆகியவையும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User