”ஆர்த்தியை இதுக்காகத்தான் Divorce செய்கிறேன்....” - மனம் திறந்த ஜெயம்ரவி!

தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வது எதற்காக என்பது குறித்து முதல்முறையாக வெளிப்படையாக நடிகர் ஜெயம்ரவி பேசியுள்ளார். 

Sep 20, 2024 - 21:17
0 989
”ஆர்த்தியை இதுக்காகத்தான் Divorce செய்கிறேன்....” - மனம் திறந்த ஜெயம்ரவி!

ஜெயம் ரவி, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், திரையுலகில் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காத நடிகராகவும் வலம் வந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக அவரது திருமண வாழ்க்கை குறித்தான விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. 

தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட, தன்னிடம் சம்மதம் கேட்காமல் விவாகரத்து முடிவு எடுத்துள்ளதாக அவரது மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தனது விவாகரத்து முடிவுக்கான காரணம் குறித்து ஜெயம் ரவியே ஓபனாக விளக்கம் அளித்துள்ளார். 

”விவாகரத்து குறித்து எனது மனைவி ஆர்த்தி கூறிய கருத்து என்பது தவறானது. அவருக்குத் தெரியாமல் இது நடக்கவே இல்லை. சமூக வலைத்தளத்தில் அறிவிப்பதற்கு முன்பே இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அதன்பின்னர் தான் முறைப்படி மீடியாவில் இந்த தகவலை வெளியிட்டேன். எந்த முடிவு எடுத்தாலும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே எனது பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். அதேபோல் தான் இந்த விஷயத்திலும். 

என்னுடைய இரண்டு மகன்களில், முதல் மகன் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் ஏற்கனவே விவாகரத்து குறித்து அவனிடம் பேசிவிட்டேன். ஆனாலும் அவர்களுக்கு நான் ஆர்த்தியை பிரிவதில் விருப்பமே இல்லை. இருப்பினும் சூழல் காரணமாக நான் ஆர்த்தியை பிரிய முடிவு செய்துள்ளேன். அதேநேரம் எனது மகன்களை நான் என்றைக்கும் கைவிடும் எண்ணம் கிடையாது. சமீபத்தில் கூட எனது மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்தே கொண்டாடினோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இனிமேல் நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும், அப்போது பல உண்மைகளும் தெரியவரும்” என்று ஒரே போடாக போட்டுள்ளார் ஜெயம்ரவி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User