Vettaiyan: அடுத்தடுத்து அப்டேட்டில் தெறிக்கவிடும் வேட்டையன்... வைரலாகும் ஃபஹத் பாசில் கிளிம்பிஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தில் இருந்து ஃபஹத் பாசில் கேரக்டர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதேபோல், செகண்ட் சிங்கிள் ரிலீஸ் பற்றியும் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார் அனிருத்.

Sep 18, 2024 - 21:27
0 243
Vettaiyan: அடுத்தடுத்து அப்டேட்டில் தெறிக்கவிடும் வேட்டையன்... வைரலாகும் ஃபஹத் பாசில் கிளிம்பிஸ்!
வேட்டையன் அப்டேட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தசெ ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 20ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட் வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது படக்குழு. அதன்படி வேட்டையன் படத்தில் நடித்துள்ள ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் ஆகியோரின் கேரக்டர்களை படக்குழு வெளியிட்டது. 

அதன் தொடர்ச்சியாக ராணாவின் கேரக்டருக்கான கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியானது. அதன்படி நடராஜ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ராணா. அடுத்த சில மணி நேரங்களில் ஃபஹத் பாசிலின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பேட்ரிக் என்ற கேரக்டரில் நடித்துள்ள ஃபஹத் பாசிலின் கேரக்டர் கிளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பஹத் பாசிலுடன் ரஜினிகாந்த் ஜாலியாக விளையாடும் ஒரு சீன், ரசிகர்களுக்கு செம வைப் கொடுத்துள்ளது. 

அதேபோல் வேட்டையன் படத்தின் இரண்டாவது பாடல் குறித்தும் படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான மனசிலாயோ பாடலுக்கு ரசிகர்கள் ரிலீஸ் செய்து அட்ராசிட்டி செய்து வருகின்றனர். இப்போது இரண்டாவது பாடலும் வெளியாகவுள்ளது. Hunter Vantaar என்ற டைட்டிலில், ராப் இசை ஜானரில் உருவாகியுள்ள இப்பாடலை சித்தார்த் பஸ்ரூர், தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடல் நாளை மறுநாள் (செப்.20) வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

அதேநாளில் தான் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இதுவரை அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இருவரது கேரக்டர் பற்றி மட்டும் படக்குழு அறிவிக்கவில்லை. இந்த இரண்டு அப்டேட்டும் நாளை (செப்.19) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் திரைப்படம் சிங்கிளாக ரிலீஸாக உள்ளதால் ரஜினி ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் காத்திருக்கிறது.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User