போதையில் பலியான இளைஞர்.. திருப்பத்தூரில் மர்ம மரணம்.. விசாரிக்கும் போலீஸ்

வீட்டுக்கு வந்து தகவல் கூறிய இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை

Apr 27, 2024 - 16:08
0 360
போதையில் பலியான இளைஞர்.. திருப்பத்தூரில் மர்ம மரணம்.. விசாரிக்கும் போலீஸ்

திருப்பத்தூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த மணி விறகு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 7 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் மோகன் ஆகிய  இரு இளைஞர்கள் மணியின் வீட்டிற்கு சென்று, தங்களின் மகன் பழனிவேல் அளவுக்கு அதிகமான போதையில் குடிசை ஒன்றில் படுத்து கிடப்பதாக கூறி சென்றுள்ளனர்.

இதனால் பதறிப்போன பெற்றோர், ஓடிச்சென்று பார்த்தபோது பேச்சுமூச்சின்றி பழனிவேல் கிடந்துள்ளார். அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பழனிவேலின் தாய் செல்வி, திருப்பத்தூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வீட்டுக்கு வந்து தகவல் கூறிய  சந்துரு மற்றும் மோகன் ஆகிய இரண்டு பேரையும் பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது அவ்வை நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User