நீ முஸ்லீம் ”அப்படித்தான்” இருப்ப..! மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்.. திமுக நிர்வாகி மீது வழக்கு! 

திமுகவினர் அளித்த புகாரின் பேரில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி அஸ்ஸாம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Feb 20, 2024 - 11:38
0 372
நீ முஸ்லீம் ”அப்படித்தான்” இருப்ப..! மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்.. திமுக நிர்வாகி மீது வழக்கு! 

திமுக அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய படிவத்தை வீடு வீடாக கொடுக்கச் சென்ற இடத்தில் திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள்  கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

சென்னை வியாசர்பாடி அடுத்த எருக்கஞ்சேரி பார்த்தசாரதி தெருவில் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களின் படிவத்தை வீடு வீடாக சென்று திமுக கட்சியை சார்ந்த பெண்கள் கொடுத்துள்ளனர். அப்பொழுது பார்த்தசாரதி ரெட்டி தெரு பகுதியில் வசிக்கும் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி அஸ்லாம் என்பவரிடமும் அவர்கள் நலத்திட்ட பயன்பெறும் படிவத்தை கொடுத்துள்ளனர்.

இதனைபெற்றுக் கொண்ட அஸ்லாம், அவர்களின் கண்முன்னே  படிவத்தை கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்கள் திமுக வட்ட செயலாளர் ஹரிதாஸ் என்பவரிடம் முறையிட்டுள்ளனர். ஹரிதாஸ் தனது கட்சியினருடன் அஸ்லாம் வீட்டிற்கு சென்று முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் எனக் கூறி சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த அஸ்ஸாம் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து அஸ்ஸாம்கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதுமட்டுமின்றி நேற்று இரவு மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி 50-க்கும் மேற்பட்டோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முன்பு ஓன்று திரண்டு திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோரிக்கை விடுத்தனர்.

அப்போது அங்கு வந்த திமுகவினர் மனிதநேய கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.‌ பின்னர் ஆய்வாளர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். தொடர்ந்து கொடுங்கையூர் போலீஸார் அஸ்ஸாம் அளித்த புகாரின் பேரில் திமுக வட்ட செயலாளர் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதேப்போல் திமுகவினர் அளித்த புகாரின் பேரில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி அஸ்ஸாம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User