நகைப்பிரியர்களே கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க ! ஏனா தங்கம், வெள்ளி விலையில் சேஞ்ச் இல்ல

நேற்றைய தங்கம் சவரனுக்கு ரூ.1600 குறைந்திருந்த நிலையில், இன்றைய தினம் தங்கம், வெள்ளி விலை மாற்றமில்லாமல் விற்பனை ஆகிறது.

Apr 30, 2026 - 04:35
Updated: 3 months ago
0 315
நகைப்பிரியர்களே கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க ! ஏனா தங்கம், வெள்ளி விலையில் சேஞ்ச் இல்ல
தங்கம்,வெள்ளி விலை மாற்றமில்லை

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. 

சென்னையில் நேற்றை தினம் காலை  தங்கம் சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

நேற்றைய மாலையில் மீண்டும் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1600 குறைந்தநிலையில், இன்றைய தினம் தங்கம் விலை மாற்றமில்லாமல் சவரன் ரூ.1,11,200-க்கும், கிராமுக்கு ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User