பரத நாட்டிய வகுப்புக்கு வந்த சிறுமியிடம் சில்மிஷம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது

மனைவி நடத்தி வரும் பரத நாட்டிய வகுப்புக்கு வந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Apr 30, 2026 - 04:51
0 446
பரத நாட்டிய வகுப்புக்கு வந்த சிறுமியிடம் சில்மிஷம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் சிறுமி மாலை நேரத்தில் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள தனியார் பரத் நாட்டிய பயிற்சி மையத்தில் நடனம் கற்று கொள்ள வேண்டி சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமி வழக்கம் போல் பரத நாட்டிய வகுப்புக்கு வந்துள்ளார்.

அப்போது பரத நாட்டிய மாஸ்டரின் கணவரான உமாசங்கர் (60) என்பவர் சிறுமியை தனிமையில் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூற உடனே பெற்றோர் சம்மந்தப்பட்ட நபர் மீது கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உமாசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User