ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அண்ணாமலை

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, பால், பிரட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

Dec 07, 2023 - 16:02
Updated: 3 years ago
0 158
ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அண்ணாமலை

திருவள்ளூர் மாவட்டம் மேற்கு பாஜக சார்பாக ஆவடி வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில்நல திட்ட உதவிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்

கடந்த 2 தினங்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் புயல் மழை பெய்தது. இந்த மழையில் பல பகுதிகளில் தண்ணீர் நின்று பொதுமக்களின் வாழ்வாதாரம் இல்லாமல் இல்லாமல் தவித்து வந்தனர்.

பல்வேறு கட்சியினர் நல திட்டம் உதவிகள் வழங்கி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திருவள்ளூர் மேற்குமாவட்டம் பாஜக தலைவர் அஸ்வின் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  2000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, பால், பிரட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் ராஜகோபால், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பிஎன்எஸ் சதீஷ் மற்றும் பாஜக மாவட்ட நிர்வாகிகள்ஆவடி நகர நிர்வாகிகளும் கலந்துகொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 2

Comments (0)

User