"உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்" – மதிமுக திட்டவட்டம்!

Feb 29, 2024 - 12:39
Updated: 2 years ago
0 383
"உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்" – மதிமுக திட்டவட்டம்!

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் செய்தால் நாங்கள் அதை ஏற்க மாட்டோம் என திமுக கூட்டணி கட்சியான மதிமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்  தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் இன்று தீவிர பேச்சுவார்த்தையில் அண்ணா அறிவாலயத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து, மதிமுக கட்சியின் பேச்சுவார்த்தை குழு தலைவர் அர்ஜுன் ராஜ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், "திமுகவிடம் இரண்டு மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடத்தை கேட்டிருந்தோம். அதற்கு திமுக இசைவு தெரிவிக்காத நிலையில், கடந்த முறை போலவே ஒரு மக்களவை ஒரு மாநிலங்களவை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.

அதேபோல், எங்கள் கட்சி சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் என உறுதியாக தெரிவித்துள்ளோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் செய்தால் நாங்கள் அதை ஏற்க மாட்டோம். தொகுதி பங்கீடு உறுதி செய்யும் வரை மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும்" என்று அர்ஜுன் ராஜ் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User