Vijay: “ஆனந்தம் ஆனந்தம் பாடும்..” அம்மா, அப்பாவுடன் விஜய்... ட்ரெண்டாகும் போட்டோ!

விஜய் தனது அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

May 27, 2024 - 18:17
0 394
Vijay: “ஆனந்தம் ஆனந்தம் பாடும்..” அம்மா, அப்பாவுடன் விஜய்... ட்ரெண்டாகும் போட்டோ!

சென்னை: விஜய் நடித்து வரும் கோட் திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு தற்போது பிரேக் விடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் ரெஸ்ட் எடுத்து வருகிறார் விஜய். மேலும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளையும் அவர் சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

இதனிடையே விஜய்யை அவரது அம்மாவும் அப்பாவும் நேரில் சந்தித்துள்ளனர். விஜய்யின் ஆரம்ப காலங்களில் விஜய்க்காக படங்கள் தயாரித்தும் இயக்கியும் பக்க பலமாக இருந்தவர்கள் இவர்கள் இருவரும் தான். விஜய்யை டாப் ஹீரோவாக்கிவிட வேண்டும் என்பதில் அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் உறுதியாக இருந்தார். இதனால் ஒருகட்டம் வரை விஜய் நடிக்கும் படங்களின் கதைகளை அவரே செலக்ட் செய்து வந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் கதை கேட்பதிலும், அரசியல் ரீதியாக அட்வைஸ் செய்வதிலும் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையே பிரச்சினை என சொல்லப்பட்டது. 

இதனையடுத்து விஜய் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசுவது இல்லை எனவும் தகவல்கள் வெளியாகின. அதேநேரம் அம்மா ஷோபாவை மட்டும் அடிக்கடி சந்தித்து வந்தார் விஜய். ஆனால், கடந்தாண்டு எஸ்.ஏ சந்திரசேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.ஏ. சியை விஜய் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அம்மா, அப்பாவுடன் விஜய் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதன்பின்னர் தற்போது தனது பெற்றோரை சந்தித்துள்ளார் விஜய்.

பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அப்பார்ட்மெண்ட்டில் எஸ்.ஏ சந்திரசேகரும், ஷோபாவும் தனது மகனை நேரில் சந்தித்துள்ளனர். அப்போது மூவரும் ஒன்றாக எடுத்துகொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. கோட் படத்தின் லுக்கில் விஜய் செம்ம ஹேண்ட்ஸம்மாக நடுவில் நிற்க, SAC-யும் ஷோபாவும் அவரது அருகே உள்ளனர். இந்த போட்டோவை ட்ரெண்ட் செய்து வரும் விஜய் ரசிகர்கள், தளபதி எப்போதும் பெற்றோரை விட்டுக் கொடுக்க மாட்டார் என பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். முன்னதாக விஜய்யின் லியோ படத்தை எஸ்.ஏ சந்திரசேகர் பங்கமாக கலாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User