Vijay: ”நீ அஜித் ஆளு... GOAT மூவில சான்ஸ் கிடையாது..” பிரேம்ஜியை அலற விட்ட தளபதி விஜய்!

வெங்கட் பிரபு இயக்கும் GOAT படத்தில் பிரேம்ஜிக்கு நடிக்க சான்ஸ் கொடுக்கக் கூடாது என விஜய் ஆர்டர் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 28, 2024 - 11:34
0 355
Vijay: ”நீ அஜித் ஆளு... GOAT மூவில சான்ஸ் கிடையாது..” பிரேம்ஜியை அலற விட்ட தளபதி விஜய்!

சென்னை: விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் தி கோட், செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை உட்பட பல பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது. கோட் படத்தில் விஜய் 3 கெட்டப்புகளில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் மட்டுமே விஜய் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல், கேப்டன் விஜயகாந்தை AI டெக்னாலஜி மூலம் நடிக்க வைத்துள்ளாராம் வெங்கட் பிரபு. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தி கோட் படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி நடிக்கக் கூடாது விஜய் ஆர்டர் போட்டதாக சொல்லப்படுகிறது. தனது முதல் படத்தில் இருந்து தம்பி பிரேம்ஜிக்கும் ஒரு கேரக்டர் கொடுப்பது வெங்கட் பிரபுவின் வழக்கம். இதுபற்றி ஏற்கனவே பல மீம்ஸ்கள் வெளியாகி வைரலாகின. அதாவது கோட் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னர், வெங்கட் பிரபுவையும் பிரேம்ஜியையும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார் விஜய். அப்போது பிரேம்ஜியை வம்பிழுத்த விஜய், “நானும் உன் அண்ணனும் சேர்ந்து படம் பண்ணினால் உனக்கு அதில் சான்ஸ் கிடையாது. என்ன இருந்தாலும் நீ தல அஜித்தோட ஆள்ன்னு தெரியும். அதனால உனக்கு நடிக்க வாய்ப்பில்ல, வேணும்ன்னா அந்தப் படத்துக்கு மியூசிக் கம்போஸ் பண்ணிக்கோ” என்றுள்ளார்.

விஜய் ஜாலியாக கலாய்த்ததை எதிர்பார்க்காத பிரேம்ஜி, எற்கனவே உங்க ரசிகர்கள் என்னை வசூ செய்கின்றனர். அதனால் கோட் படத்தில் தனக்கும் சான்ஸ் வேண்டும் என்பதாக கேட்டாராம். இதனை பார்த்துக்கொண்டிந்த வெங்கட்பிரபுவும் விஜய்யுடன் சேர்ந்து பிரேம்ஜியை கலாய்த்துள்ளார். ஆனால், விஜய் சொன்னதை போல இல்லாமல், தி கோட் படத்தில் பிரேம்ஜியும் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். மங்காத்தா படத்தில் அஜித்துடன் அட்ராசிட்டி செய்த பிரேம்ஜி, கோட் மூவியில் விஜய்யுடன் பங்கம் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கோட் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, வைபவ், அஜ்மல், யோகி பாபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் தாறுமாறான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் கேரியரில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக தி கோட் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User