Vijay: சாய் பாபா கோயிலில் சாமி தரிசனம்… தளபதி விஜய்யின் திடீர் விசிட்… என்ன காரணம்..?

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. இதில் விஜய் பங்கேற்கவுள்ள நிலையில், சாய் பாபா கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்த போட்டோ வைரலாகி வருகிறது.

Apr 08, 2024 - 17:32
0 306
Vijay: சாய் பாபா கோயிலில் சாமி தரிசனம்… தளபதி விஜய்யின் திடீர் விசிட்… என்ன காரணம்..?

சென்னை: கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யா சென்றுவிட்டனர். அங்கு லொக்கேஷன் பார்க்கச் சென்ற வெங்கட் பிரபுவும் அர்ச்சனா கல்பாத்தியும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வந்தது. தற்போது அதனை ஓவர்டேக் செய்துள்ளது தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் கிளிக். கேரளாவில் இருந்து சென்னை திரும்பிய விஜய், அடுத்து துபாய் வழியாக ரஷ்யா சென்றதாக சொல்லப்படுகிறது.  

கடந்த வாரம் விஜய் துபாய் சென்றபோது சென்னை விமான நிலையத்தில் எடுத்த போட்டோஸ் வைரலாகின. இந்த நிலையில் சாய் பாபா கோயிலில் விஜய் சாமி தரிசனம் செய்த போட்டோவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவில் விஜய் ப்ளூ டீ-ஷர்ட்டில் சிம்பிளாக நின்று கொண்டிருக்கிறார். ஆனால் இந்த சாய் பாபா கோயில் எந்த லொக்கேஷனில் உள்ளது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் அரசியலுக்கு வரவிருக்கும் விஜய், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார்.  

அதன்படி, தளபதி 69 தான் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ஹெச் வினோத் தான் தளபதி 69 படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட் ரீலீஸான பின்னர் தான் தளபதி 69 பற்றிய அபிஸியல் அப்டேட்ஸ் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே இன்னும் சில தினங்களில் கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் எனத் தெரிகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User